பாலா படம்தானே… வரட்டுமே…. சிவகார்த்திகேயன் நக்கல் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

1838

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தை ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து செப்டம்பர் 29-ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

தொடர்விடுமுறையை கருத்தில் கொண்டு ரெமோ படத்தை வெளியிட்டு பணத்தை அள்ளிய அதே ஃபார்முலாவில்தான் வேலைக்காரன் படத்தையும் ரிலீஸ் செய்ய நாள் குறித்திருந்தனர்.

ஆயுதபூஜை விடுமுறையில் தற்போது வேறு சில படங்களும் வெளிவருவதாக வரும் தகவல்கள் சிவகார்த்திகேயன் தரப்பை அப்ஸெட்டாக்கி இருக்கிறது.

மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ஸ்பைடர் படம் நேரடி தமிழ்ப்படம் போன்ற போலிவிளம்பரத்துடன் ‘வேலைக்காரன்’ படத்துக்குப் போட்டியாக செப்டம்பர் 29-ம் தேதி வெளியாவதாக செய்திகள் வந்தன.

தற்போதைய தகவலின்படி, 2 நாட்கள் முன்னதாக அதாவது செப்டம்பர் 27-ஆம் தேதியே ஸ்பைடர் படம் திரைக்குவருகிறது.

இந்தப் படம் தவிர, பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் ‘நாச்சியார்’ படமும் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா, எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜோதிகா முதல்முறையாக பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் என்ற படத்தில் வருகிறார்.

இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் ஜி.வி.பிரகாஷும் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்துக்கு போட்டியாக, ஏற்கெனவே , ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ்பாபுவின் கூட்டணியின் ‘ஸ்பைடர்’ படம் களமிறங்க உள்ளநிலையில், தற்போது பாலாவின் படமும் வெளியாகவிருப்பதால் வேலைக்காரன் படத்துக்கான நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

வேலைக்காரன் படத்துக்கு கிடைக்கவிருந்த தியேட்டர் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பு அண்மையில் ஆலோசனை நடத்தியிருக்கிறது.

அப்போது, பாலா படம்தானே… வரட்டுமே…. என்று சிவகார்த்திகேயன் நக்கலாக சிரித்தாராம்.

சிவகார்த்திகேயன் நக்கல் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

கடந்த 2016ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையில் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘தாரை தப்பட்டை’ படமும், சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படமும் ரிலீஸாகின.

வசூலில் பாலாவின் தாரை தப்பட்டை கிழிந்து தொங்க, ரஜினி முருகன் படமோ பணத்தை மூட்டைமூட்டையாக அள்ளியது.

இதை மனதில் கொண்டுதான் பாலா படம் எல்லாம் நமக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற அர்த்தத்தில் நக்கலாக சிரித்திருக்கிறார் சிவகார்த்திகேகயன்.

– ஜெ.பிஸ்மி