சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘LIC’

95

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன!

ஆர்.டி.ராஜா தயாரித்த சீமராஜா படம் பஞ்சாயத்தில் சிக்கியபோது அந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்காக பல கோடி கடனுக்கு ஜாமீன் கையெழுத்துபோட்டார் சிவகார்த்திகேயன்.
அதற்கே பல லட்சங்கள் வட்டி கட்ட வேண்டியிருப்பதால் பல படங்களை ஒப்புக்கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடன்களை அடைக்க திட்டமிட்டுள்ளார்.

அதன் காரணமாகவே பல படங்களை கமிட் பண்ணி வருகிறார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், இப்போது ‘நேற்று இன்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் குறித்த அதிகாரரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு ‘LIC’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.