படத்தை ஓட வைக்க ஒரு குறுக்குவழி… – இது சிவகார்த்திகேயன் சீக்ரெட்…

1169

சில வருடங்களுக்கு முன் சாதாரண நடிகராக இருந்த சிவகார்த்திகேயனை அண்மைக்காலமாக மாபெரும் நட்சத்திரமாக சித்தரிக்கும் முயற்சிகள் நடைபெற்று  வருகின்றன.

எந்நேரமும் அவரைச் சுற்றி ஜிம்பாய்ஸ் என்கிற அடியாட்கள் கூட்டம்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து பத்தடி தூரத்திலேயே கேரவான்.

யாராவது அவரிடம் கதை சொல்ல அணுகினால், “பத்து படத்துக்கு சப்ஜெக்ட் ஓகே பண்ணி வச்சாச்சு. நீங்க வேணா 2025ல் கான்டாக்ட் பண்ணுங்களேன்…” என்கிற அளவுக்கு பில்ட்அப்.

“ரஜினியையே பின்னுக்குத்தள்ளியாச்சு. சிவாதான் நம்பர் ஒன்.” என்கிற ரேன்ஜுக்கு சிவகார்த்திகேயனின் எடுபிடிகள் பண்ணுகிற அலப்பரைகள்.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் வசூல்தான்.

ரஜினி முருகன் அளவுக்கு ‘ரெமோ’ படத்தின் வசூல் இல்லை.

என்றாலும், ரெமோ படத்தை கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிட்டதில்தான் ரெமோ படம் தப்பித்தது.

தொடர் விடுமுறையை கணக்கில் கொண்டு ரெமோ படத்தை வெளியிட்டனர். அவர்களின் கணிப்பின்படியே கல்லா நிரம்பியது.

ரெமோ படத்தைத் தொடர்ந்து ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன்  மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ஸ்னேகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

தனி ஒருவன் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த மோகன் ராஜா இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதை எல்லாம் கணக்கில் வைத்து வேலைக்காரன் படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தார்கள்.

இப்போது ‘வேலைக்காரன்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

உண்மையான காரணம் வேறு… நயன்தாரா நடித்த டோரா படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் அவரது முகத்தை வைத்து படத்தை ஓட்ட முடியாது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி படத்தை வெளியிட்டால், ஒருவேளை படத்தின் ரிசல்ட் நெகட்டிவ்வாக இருந்தால் வசூலை அள்ள முடியாமல்போகும்.
அதோடு, திங்கள்கிழமையே தியேட்டர்கள் காலியாகிவிடும்.

இதை கணக்கில் வைத்துதான், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, வாரவிடுமுறை நாட்கள், முகரம் (அக்டோபர் 1), காந்தி ஜெயந்தி ( அக்டோபர் 2 ) என தொடர்ச்சியாய் விடுமுறை தினம். இந்த நாட்களில், நிச்சயமாக தியேட்டர்கள் ஃபுல்லாகிவிடும். கல்லாப்பெட்டியும் நிரம்பிவிடும்.

இதுதான் சிவகார்த்திகேயனின் வெற்றி ரகசியம்.

இப்போது புரிகிறதா?