சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் படம் மூவி வுட் ஒடிடி தளத்தில்..

104

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள ‘யுத்த காண்டம்’ என்கிற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது..

இந்தப்படம் கடந்த ஆகஸ்ட்—15ஆம் தேதி மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.

‘கன்னிமாடம்’ புகழ் ஸ்ரீராம் கார்த்திக் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிரிஷா குறூப், சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, பாரடைஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மூவி வுட் ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் கொண்டுள்ளது.

அந்தவகையில் மலையாளத்தில் உருவாகி, கேரளாவில் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பை சம்பாதித்த ‘பிப்ரவரி-29’ என்கிற படமும் ஆக-18ல் இதே மூவி வுட் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

மூவி வுட் ஒடிடி தளத்தில் வருடத்திற்கு வெறும் 99 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி இந்த தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்த்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டாலும் விரும்பும் படங்களை 5 ரூ முதல் 50 ரூ வரை கட்டணம் செலுத்தி பார்க்கின்ற வசதியும் இந்த தளத்தில் (மட்டுமே) உண்டு.

தெளிவு பாதையில் நீச தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், உலக திரைப்பட விழாவில் விருது பெற்ற இன்ஷா அல்லா என சிறிய பட்ஜெட்டில் உருவான மிகச்சிறந்த படங்களையும் இதில் பார்த்து ரசிக்கலாம்.

அதுமட்டுமல்ல ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தங்களது அபிமான நடிகர்களின் சிறந்த படங்களையும் இதில் பார்க்க முடியும்.

தியேட்டர்களில் ரிலீஸாகும் வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை வசூல் பங்கீடு என்கிற முறையில் இந்த மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியிடும் வசதியும் உண்டு. சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய முடியும்.