சிங்கம்-3 தள்ளி வைப்பு… உண்மை காரணம் என்ன தெரியுமா?

singam-story_647_092616022640

கடந்த காலத்தில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததில் சிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு படங்கள்தான் சாதனை படைத்துள்ளன.

இந்த சாதனையை மிக சமீபத்தில் முறியடித்தது சிங்கம்- 3 படம்தான்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சிங்கம் 3’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

சிங்கம்-3  படம் கடந்த வருடம் நவம்பர் மாதமே வெளிவந்திருக்க வேண்டியது.

சென்சாரில் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் கடுப்பான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார்.

ரிவைசிங் கமிட்டி சிங்கம்-3 படத்தை பார்க்க தாமதம் செய்ததால் வேறுவழியில்லாமல் டிசம்பர் 23 ஆம் தேதிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

ஜெயலலிதா மரணம், பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு ஆகிய காரணங்களினால் டிசம்பர் 23 ஆம் தேதி அன்று படம் வெளியாகவிலல்லை.

பின்னர் பொங்கலுக்கு வெளியீடு என்று சொல்லப்பட்டு பைரவா உடன் பஞ்சாயத்து வேண்டாமே என்று அதன் பிறகு ஜனவரி 26-ம் தேதிக்கு வெளியீடு என விளம்பரம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவிய போலீஸ் மீது மக்கள் செம கடுப்பில் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் போலீஸை நல்லவனாக சித்தரிக்கும் சிங்கம்- 3 படத்தை வெளியிட்டால் படத்துக்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள் என்பதால், ஜனவரி 26 லிருந்து  பிப்ரவரி 3 ஆம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அடுத்த சில மணி நேரங்களிலேயே, பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் தேதி இப்படி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருக்க என்ன காரணம்?

மேலே சொன்ன காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது, இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு சுமார் 40 கோடி கடன் இருக்கிறதாம்.

சிங்கம்-3 படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன் அந்தப் பணத்தை செட்டில் பண்ண வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்த விஷயத்தில் சூர்யா உதவி செய்ய மாட்டேன் என்று கைவிரித்துவிட்டதாகவும், பணத்தைப்புரட்ட ஞானவேல்ராஜாவுக்கு அவகாசம் தேவைப்படுவதால்தான் சிங்கம் – 3 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துக் கொண்டே வருவதாகவும் தகவல்.

இது உண்மை என்றால்… சிங்கம்-3 பிப்ரவரி 9-ம் தேதியாவது ரிலீஸ் ஆகுமா?