உதயநிதிக்கு மனைவிக்கு நோ கால்ஷீட்! – பழிக்குப் பழி வாங்கிய சிம்பு!

1043

தடைகளைக் கடந்து கடந்த வாரம் ஒருவழியாக வெளியாகிவிட்டது – வாலு படம்.

ஆனாலும் அந்தப்படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியவர்களை சிம்பு மன்னிப்பதாக இல்லை.

”வாலு பட பிரச்சனைகளுக்கு நானே காரணம்… படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்” என்றெல்லாம் சிம்பு தத்துவார்த்தமாக சொன்னாலும், உண்மையில் சத்தமில்லாமல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

வாலு படம் தியேட்டருக்கு வர முடியாமல் பல தடைகள் ஏற்பட்டன. அவை அனைத்தும் வாலு படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அப்படத்தின் மீது வாங்கிய கடன்களினால் ஏற்பட்ட தடைகள்.

கடன் பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து ஆகஸ்ட் 14 அன்று வாலு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியபோது, உதயநிதி ஸ்டாலின் தரப்பிலிருந்து வாலு படத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதாக சிம்பு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆர்யா தயாரித்து நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தை உதயநிதி ரிலீஸ் பண்ணினார்.

அதே தேதியில் வாலு படமும் ரிலீஸ் ஆனால் வசூல் பாதிக்கும் என்று நினைத்தோ என்னவோ வாலு படத்துக்கு தியேட்டர் கிடைக்காதபடி மறைமுகமாக குடைச்சல் கொடுத்தாராம் உதயநிதி.

இது தொடர்பாக சிம்பு ரசிகர்கள் உதயநிதியை திட்டித்தீர்க்க, உதயநிதி பதிலுக்கு அவர்களை திட்ட… பழைய கதை இது.

அப்ப புதிய கதை என்ன?

உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓடவில்லை. எனவே அடுத்து கமர்ஷியலாக ஒரு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார்.

சிம்புவும் கிருத்திகாவின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார்.

இதுகுறித்து அதிகாரபூர்வமாக ஏற்கனவே செய்திகள் வந்துவிட்டநிலையில், தான் இயக்கும் படத்தின் ப்ரீ புரடக்ஷன் வேலையில் பிஸியாக இருந்தார் கிருத்திகா.

இப்படியொரு சூழலில்தான் கிருத்திகா இயக்கத்தில் நடிக்க விருப்பமில்லை என்று சிம்புவிடமிருந்து மெஸேஜ்…!

வாலு படத்துக்கு உதயநிதி கொடுத்த குடைச்சலுக்கு பழிக்குப் பழி!