சூடுபிடித்தது சிம்பு – லிங்கு மோதல்… ஒரு கோடி ரூபாய் விவகாரம்….

650

சிம்பு என்றாலே வம்பு என்று அவர் பிறக்கும்போதே தலையில் எழுதப்பட்டுவிட்டது போலிருக்கிறது.

சென்ற இடமெல்லாம் ஏழரையை இழுக்காமல் இருக்க மாட்டார் சிம்பு.

லேட்டஸ்ட்டாக, சிம்பு மீது லிங்குசாமி புகார்  கொடுத்திருக்கிறார்.

என்னிடம் வாங்கிய ஒரு கோடி ரூபாய் முன்பணத்தை  திருப்பித் தர மறுக்கிறார் என்று சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் அளித்துள்ளார்.

என்ன விஷயம்?

இது சுமார் ஆறு வருடங்களுக்கு முந்தைய பஞ்சாயத்து.

நீறு பூத்த நெருப்பாக கிடந்த இந்த விவகாரம் இப்போது வெடித்துக்கிளம்பியிருக்கிறது.

ஆறு வருடங்களுக்கு முன்பு சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்தார் லிங்குசாமி.

இதற்காக சிம்புவுக்கு சம்பளம் பேசி ஒரு கோடி ரூபாய் முன்பணமும் கொடுத்தார்.

அந்தப் படத்துக்கு வேட்டையன் என்று தலைப்பு வைத்திருப்பதாக அப்போது தகவல் அடிபட்டது.

படப்பிடிப்பு துவங்க சில நாட்கள் இருந்தநிலையில் வழக்கம்போல் லிங்குசாமியிடம் பிரச்சனை பண்ண ஆரம்பித்துவிட்டார் சிம்பு.

அப்போது லிங்குசாமியும் உச்சத்தில் இருந்த நேரம்.

சிம்புவை தன் கால்தூசிக்கு சமமாக எண்ணி எகிறியிருக்கிறார் லிங்கு.

அதனால் லிங்குசாமியின் படத்திலிருந்து விலகினார் சிம்பு.

அதோடு சும்மா இல்லாமல் வேண்டுமென்றே  லிங்குசாமியின் வேட்டையன் என்ற தலைப்பின் சாயலிலேயே தன்னுடைய படத்துக்கு வேட்டை மன்னன் என்று தலைப்பை வைத்தார்.

இதனால் லிங்குசாமிக்கும் சிம்புவுக்கும் தகராறு முற்றியது.

பின்னர் சிம்புவின் வேட்டை மன்னன் ட்ராப்பாக, மாதவன், ஆர்யாவை வைத்து வேட்டை என்ற பெயரில் லிங்குசாமி படம் எடுத்தது தனிக்கதை.

கமலை வைத்து உத்தமவில்லன் படத்தை தயாரித்த பிறகு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார் லிங்குசாமி.

அதிலிருந்து இன்றுவரை அவரால் மீள முடியவில்லை.

எனவே ஏற்கனவே யாருக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்திருக்காரோ அவர்களை எல்லாம் தேடிச்சென்று கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு வருகிறார் லிங்குசாமி.

இந்த பட்டியலில் சிம்புவும் இருக்கிறார். ஒரு கோடி ரூபாயை அட்வான்ஸாக வாங்கியவர் அந்தப் படத்திலிருந்து விலகிய பிறகு இந்த ஆறு வருடத்தில் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்க முயற்சிக்கவே இல்லை.

பண விஷயத்தில் சிம்பு அண்ட் ஃபேமிலி ஒன்வே ட்ராஃபிக் என்பது உலகறிந்த விஷயம்.

என்றாலும்  சிம்புவிட்ம் தான் கொடுத்த ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கேட்டார் லிங்குசாமி.

தற்போது சிம்புவை வைத்து படம் எடுக்க யாருமே முன்வராதநிலையில் வீட்டில் படுத்து  தூங்கிக் கொண்டிருக்கிறார்  சிம்பு.

இந்தநிலையில் லிங்குசாமி அட்வான்ஸை திருப்பிக் கேட்டு வர, இதுதான் சமயம் என்று, “ஒப்பந்தப்படி என்னை வைத்து படம் எடுங்கள்..  நீங்கள் கேட்கும் தேதிகளைக் கொடுத்து உங்கள் படத்தில் நடிக்கிறேன். ஆனால் அட்வான்சை திருப்பித் தரமாட்டேன்” என்று கூறிவிட்டார் சிம்பு.

அவரது தந்தை டி.ராஜேந்தரோ இன்னும் ஒருபடிமேலேபோய், “என் மகன் மீது தவறு இல்லை. உங்கள் மீதுதான் தவறு இருக்கிறது. நான் இதில் தலையிட மாட்டேன்” என்று சொல்லிவிட்டாராம்.

வேறு வழியில்லாமல் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார் லிங்குசாமி.