ட்விட்டரில் கடையைக் கட்டிய சிம்பு…! – உண்மையான காரணம் என்ன?

829

ட்விட்டரில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் தமிழ்சினிமா ஹீரோக்களில் சிம்புவும் முக்கியமானவராக இருந்தார்.

ஹன்சிகா உடன் காதல்வயப்பட்டதையும், அவருடனான காதல் முறிந்ததையும் ட்விட்டர் மூலம்தான் நாட்டுமக்களிடம் தெரிவித்தார் சிம்பு.

இதனால் தனக்கு மீடியாக்களின் தயவு கூட தேவையில்லை என்ற மனநிலையில் இருந்த வந்தார் சிம்பு.

இந்நிலையில் என்ன நினைத்தாரோ ட்விட்டரிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார் சிம்பு.

‘இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்ததற்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர், எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வாகிக்கப்படும். தேவைப் பட்டால் மட்டுமே நான் என் கருத்தை அதில் தெரிவிப்பேன். ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

அவர்களுடனான என்னுடைய தொடர்பு வெற்றி படம் மட்டும்தானே தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பது அல்ல என்பதையும் நான் உணர்ந்துக் கொண்டேன்.
என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்.’

என்று ட்விட்டரிலிருந்து கடையை மூடியதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார் சிம்பு.

வாலு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிம்பு இடை விடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறாராம்.

அதனாலேயே ட்விட்டரிலிருந்து அவர் வெளியேறியதாக சிம்புவின் நண்பர்கள் வட்டாரம் சொல்கிறது.

இந்த காரணம் நம்பும்படி இல்லை.

காரணம் சிம்பு தற்போது நடித்து வருவது அச்சம் என்பது மடமையடா படத்தில் மட்டும்தான்.

உண்மையான காரணம் என்ன?

ஒரு ஹீரோவின் ரசிகர்கள் மற்ற ஹீரோக்களை கலாய்ப்பதும், கிண்டல் பண்ணுவதும் ட்விட்டரில் சகஜம்.

அதுபோல் பிற ஹீரோக்களின் ரசிகர்கள் அடிக்கடி ட்விட்டரில் சிம்புவை செமத்தியாக ஓட்டுகின்றனர்.

அதைப் பார்க்கும்போதெல்லாம் சிம்புவுக்கு பிபி எகிறியிருக்கிறது.

அதன் காரணமாகத்தான் ட்விட்டரிலிருந்து நடையைக்கட்டினாராம் சிம்பு.

அச்சம் என்பது மடமையடா…