ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு

2771

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப்” படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன், லாஸ்லியா, சதிஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக நடிக்கும் ஹர்பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர். இப்படத்தின் “Superstar anthem” என்ற முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்.

நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார். அறிமுக இசை அமைப்பாளர் டிஎம் உதயகுமார் இசையமைத்துள்ளார்.

சிம்பு தொலைபேசியில் ஹர்பஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது, திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என வாழ்த்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஹர்பஜன் “எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கிடைத்துள்ளீர்கள்.

சென்னையில் நாம் இருவரும் விரைவில் சந்திப்போம்” என கூறியுள்ளார்.

பிரண்ட்ஷிப் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.