செம ஸ்பீடில் செல்வராகவன் படம்… ! சிம்பு திருந்தி விட்டாரா?

simbu_vaalu

மைனஸ் இன்ட்டு மைனஸ் ப்ளஸ் என்று கணிதத்தில் சொல்வது சினிமாவுக்கும் பொருந்துவது ஆச்சர்யமாக இருக்கிறது.

செல்வராகவன் இயக்கும் படம் என்றாலே நிதானமாக துவங்கி, நீ……………..ண்ட காலம் படப்பிடிப்பு நடைபெற்று ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களுக்குப் பிறகுதான் வெளியாகும்.

சிம்பு நடிக்கும் படங்களும் இப்படித்தான்.

செல்வராகவன் படமாவது இழபறிக்குப் பிறகு ஒரு வழியாக ரிலீஸ் ஆகிவிடும்.

சிம்பு படத்துக்கு இந்த உத்தரவாதம் இல்லை.

குறிப்பிட்ட தேதியில் படத்தில் நடித்து முடித்ததாக சிம்புவின் கேரியரிலேயே கிடையாது.

சிம்பு நடித்த படம் என்றால் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கும்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் கான் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட ‘கான்’ படத்தின் வேலைகள் ஆரம்பமாகி சில வாரங்களிலேயே பாதிக்கும்மேல் படப்பிடிப்பு முடிந்தவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதோடு சிம்பு ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார் செல்வராகவன்.

‘கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (புதன்கிழமை – ஜூன் 17) மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக ட்வீட் செய்திருக்கிறார் செல்வா.

ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுறது முக்கியமில்லை… ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகணுமே என்று நக்கல் அடிக்கின்றனர் சிம்புவை நன்கு அறிந்தவர்கள்.