சனி ஞாயிறு லீவு வேணும் – சிம்பு அடாவடி

57

சிம்புவை வைத்து படம் எடுப்பவர்கள் நிம்மதியாய் படத்தை முடித்த கதை கடந்தகாலத்திலும் கிடையாது. நிகழ்காலத்திலும் கிடையாது. எதிர்காலத்திலும் வாய்ப்பில்லை.

சிம்பு திருந்திவிட்டார்… கெட்டபழக்கங்களை விட்டொழித்துவிட்டார்…. இப்போது அவர் தெளிவாக இருக்கிறார் என்றெல்லாம் இடையில் செய்திகள் வெளியாகின.

சிம்பு திருந்தவில்லை என்பதை கடந்தசில தினங்களாக வெளிவரும் செய்திகள் உணர்த்துகின்றன.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.

பட அறிவிப்பு வெளியாகி ஏறக்குறைய ஒரு வருடங்களாகிவிட்டது. இதோ படப்பிடிப்பு அதோ படப்பிடிப்பு என்று பல தேதிகள் சொல்லப்பட்டன. கடைசியாக ஜூலை 8 ஆம் தேதி முதல் ஊட்டியில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இம்முறையும் மாநாடு படம் தொடங்கப்படவில்லை.

காரணம்… சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கும் முட்டிக்கொண்டு விட்டது.

சிம்புவுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு லீவு வேணுமாம். அதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் கால்ஷீட் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

தினமும் 300 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை வச்சு ஷூட் பண்ணணும். எப்படி உங்களுக்கு 2 நாள் பிரேக் கொடுக்க முடியும். அப்படி 2 நாட்கள் பிரேக் விட்டால் எனக்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் என்பது தயாரிப்பாளருடைய வாதம்.

இது விஷமாக பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.

இந்த கட்டத்திலேயே மாநாடு படத்தை ட்ராப் பண்ணிவிட்டு போய்க்கிட்டே இருங்க, இல்லைன்னா நீங்களும் மைக்கேல் ராயப்பன் மாதிரி நஷ்டப்படுவீங்க என்று சுரேஷ்காமாட்சிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்களாம் அனுபவப்பட்ட தயாரிப்பாளர்கள்.