சிம்பு தேவனின் புதிய முயற்சி

94

வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கும் படம் ‘கசட தபற’.

இந்த படத்தின் தலைப்பில் உள்ள 6 எழுத்துக்களைப்போல் இப்படத்தில் ஆறு கதைகள் இடம்பெறுகின்றன.

அதுமட்டுமல்ல, கசட தபற படத்தில் யுவன்சங்கர்ராஜா, சந்தோஷ் நாராயணன், ஷான்ரோல்டன், ஜிப்ரான், பிரேம்ஜி, சாம் சி எஸ் என 6 இசை அமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அதேபோல், ஆண்டனி, மு.காசிவிஸ்வநாதன், ராஜாமுகம்மது, ரூபன், விவேக்ஹர்ஷன் உட்பட 6 படத்தொகுப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

விஜய்மில்டன், பாலசுப்பிரமணியம், ஆர்.டி.ராஜசேகர், எம்எஸ்.பிரபு உட்பட ஆறு முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர்.

ஒரு கதைக்கு 5 நாட்கள் வீதம் 6 பகுதிகளையும் 30 நாட்களில் படமாக்கியுள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்ய இருக்கிறார் ஏஆர்முருகதாஸ்.