புத்திசாலி நடிகர் சித்தார்த்

99

புத்திசாலி நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். எப்போதாவது ஒரு படத்தில் நடித்தாலும் செமத்தியாக லாபம் பார்த்துவிடுவார்.

2017ல் அவள் என்ற படத்தை தயாரித்து நடித்தார். அந்த படத்தின் தமிழ் உரிமையை ஒருவரிடம் விற்ற சித்தார்த், தெலுங்கு ஹிந்தி உரிமைகளை வேறு பட நிறுவனங்களிடம் விற்றார். அந்த வகையில் சுமார் 10 கோடி லாபம் பார்த்தார்.

அதே அடிப்படையில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாய் சேகர் இயக்கும் படம் ‘அருவம்’.

இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார்.

ஆக்‌ஷன் கலந்த ஹாரர் ரக பமாக உருவாகி வரும் இப்படத்தில் சித்தார்த் மாறுபட்ட மூன்று கெட்-அப்களில் நடிக்கிறார் என்றும் அதைப் போல கேத்ரின் தெரெசாவுக்கும் இப்படத்தில் அவர் இதுவரை ஏற்று நடிக்காத மாறுபட்ட ஆக்‌ஷன் கேரக்டர்.

அருவம் படத்தின் தமிழ் உரிமையை இங்குள்ள படநிறுவனத்திடம் விற்றுவிட்டார்.

தெலுங்கு ஹிந்தி உரிமைகளை வேறு நிறுவனங்களிடம் விலைபேசி வருகிறாராம்.