மீண்டும் இணையும் சத்யராஜ் – சிபிராஜ் கூட்டணி

24

இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் நடிகர் சிபிராஜ்.

தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து ‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படத்தில் நடித்திருந்தார்.

இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள்.

முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள்.

சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார்.

படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.

கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் டாக்டர் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.