செம வருத்தத்தில் செல்வராகவன்

46

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடித்துள்ள படம் என்.ஜி.கே.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

செல்வராகவனும், சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள படம் என்பதால் ஆரம்பத்தில் இந்தப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவானது.

அதை சூர்யா செல்வராகவன் இருவருமே காலி பண்ணிவிட்டனர்.

என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே இரண்டு பேருக்கும் ஏழாம்பொருத்தமாகிவிட்டது.

செல்வராகவன் சொல்வதை சூர்யா கேட்கமாட்டார். இவர் கருத்தை அவர் எடுத்துக்கொள்ள மாட்டார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகி ஒரு பட்டத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த பஞ்சாயத்தினால்தான் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய என்.ஜி.கே. படம் வெளியாகவில்லை.

இருவருக்கும் இடையிலான பிரச்சனைகளை சமாளித்து ஒருவழியாக படத்தை வெளியிட உள்ளனர்.

புதுப்பேட்டை படத்தின் கதையையே நம் தலையில் கட்டிவிட்டார் என்று சூர்யா வருத்தப்பட, இந்தப்படம் என்னுடைய படமே இல்லை, நான் நினைத்தபடி எடுத்திருந்தால் நிச்சயம் ஹிட்டாகி இருக்கும் என்று செல்வராகவனும் தங்களுடைய நட்பு வட்டத்தில் புலம்பி வருகிறார்களாம்.

ஒன்னால நான் கெட்டேன்… என்னால நீ கெட்டே கதைதான் போலிருக்கிறது.