யானையுடன் நடிக்கும் ஓவியா…!

681

இயக்குநர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் – சிம்ரன் ஜோடி நடித்த ‘ஐ லவ் யூ டா ‘ படத்தை இயக்கியவர் ராஜதுரை.

பிரபல இயக்குனர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின் இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீனி.’

‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ எனும் பேனரில் மதுரை ஆர்.செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள ‘ சீனி’ திரைப்படத்தில் அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத் ரவி இருவருடன் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு 2015ஆம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் ‘யு’ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது.

‘சீனி’ தரமான படம் என, அதன் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வத்தையும், இயக்குனர் ராஜதுரையையும் அழைத்து பாராட்டும் தெரிவித்திருக்கின்றனர் தணிக்கைக்குழுவினர்.

‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிகரமான பெண் நிருபராக ஓவியா நடிக்கிறார்.

சஞ்சய், பரத் ரவி , ராதாரவி , செந்தில் , ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் , கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த் , வையாபுரி, ரவிமரியா , தாஸ் , டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார் , பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன் , புவனா உள்ளிட்ட காமெடி பட்டாளமும் , நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளது.

சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் ‘சீனி’ படத்தில் நடித்துள்ளது.

யானைப் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளாராம்.

பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம்!

‘சீனி’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சினேகன் , விவேகா இருவரும் பாடல்கள் எழுத, ராதிகா, பாரதி இருவரும் நடனம் அமைத்திருக்கின்றனர்.

சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட் பாபு , படத்தொகுப்பு – சாய் சுரேஷ், ஒளிப்பதிவு – நாகராஜன் , தயாரிப்பு – மதுரை ஆர்.செல்வம், எழுத்து, இயக்கம் – ராஜதுரை .

2016 ஜனவரி இறுதிக்குள் திரைக்குவருகிறது ‘சீனி ‘