#SaveShakthi இயக்கம் #ShameSakthi யாக மாறியது ஏன்?

776

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ (#SaveShakthi) என்ற அமைப்பை தொடங்கி உள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 08.03.2017 அன்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.saveshakthi-turns-as-shamesakthi2

வரலட்சுமி சரத்குமார் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் அவருடைய அப்பாவான நடிகர் சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் சென்ற பிறகு, சரத்குமாரின் எதிரியும், வரலட்சுமியின் வருங்கால கணவருமான நடிகர் விஷால் வருகை தந்தார்.

வரலட்சுமியின் குடும்பத்தினரான இவர்கள் தவிர, நடிகர்கள் ஜெயம்ரவி, பிரசன்னா, சித்தார்த், சாந்தனு, உதயா, மனோபாலா, சவுந்தர் ராஜா, அசோக், முன்னா, நடிகைகள் சினேகா, தன்ஷிகா, இயக்குநர்கள் மிஸ்கின், ஜான் மகேந்திரன் உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகில் பெண் பித்தராக அடையாளப்படுத்தப்பட்டு வரும் நடிகர் ஆர்யாவும் #SaveShakthi  கையெழுத்து இயக்கத்தில கலந்து கொண்டார் என்பதுதான் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்.

கலந்து கொண்டது மட்டுமல்ல, “நடிகர்-நடிகைகள் பெயரில் ஆபாச படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது வருத்தம் அளிக்கிறது. விளம்பரம் தேடுவதற்காகவே இவற்றை வெளியிடுகிறார்கள். புதிய டிரென்ட்டாக மாறிவரும் இந்த கலாசாரத்தை தடுக்க வேண்டும்.” என்று கருத்து தெரிவித்த ஆர்யா, “பிரபலமானவர்கள் பெயரில் வரும் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தும் போலியானவை.” என்றும் தன்னை மிகப்பெரிய புலனாய்வு புலியைப்போல் கருதிக் கொண்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதோடு, “எதிர்காலத்தில் இதுபோல் நிறைய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.” என்றும் ஆருடம் தெரிவித்திருக்கிறார் ஆர்யா.

எந்த அடிப்படையில் இப்படி ஒரு கருத்தை ஆர்யா தெரிவித்தார் என்பதை சுசித்ராவிடம்தான் கேட்க வேண்டும்.

ஆர்யாவின் வருகையே கடும் அதிர்சச்சியை ஏற்படுத்தியநிலையில், வரலட்சுமியின் #SaveShakthi  கூட்டத்துக்கு குடிநோயாளிகளான இயக்குநர் வெங்கட்பிரபுவும், அவரது தம்பியான பிரேம்ஜியும் வந்திருந்தது கூடுதல் அதிர்ச்சி.

இவர்களின் வருகையால்  #SaveShakthi  அமைப்பு  #ShameSakthi அமைப்பாக மாறிவிட்டதை அங்குள்ள எவரும் யோசித்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை.

முக்கியமாக வரலட்சுமி சரத்குமார்.

saveshakthi-turns-as-shamesakthi3

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அடிப்படையான காரணமாக இருப்பது குடிவெறிதான்.

டெல்லி நிர்பயா சம்பவம் உட்பட நாட்டை உலுக்கிய பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், பெண்களை வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள்  தன்நிலை மறக்கும் அளவுக்கு குடித்திருந்ததும், அதன் காரணமாகவே கற்பழிப்பில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

இப்படியான சூழலில், குடிப்பதையை பிழைப்பாக வைத்திருக்கும் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும்  #SaveShakthi  கையெழுத்து இயக்க நிகழ்வுக்கு வந்தை எப்படி எடுத்துக் கொள்வது?

குடிப்பதும், அதனால் குடல் அழுகி சாவதும் அவர்களது தனிப்பட் விஷயம் என்றாலும், எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் குடிப்பதை கொண்டாட்டமாக பேசுவதையும், குடித்து கும்மாளம் போடுவதை பார்ட்டி பண்ணுவது என்று நாகரிகமாக பெயர் சூட்டி அழைப்பதுமாக குடிக்கு ஆதரவான கருத்தை தொடர்ந்து பரப்பி வருபவர்கள்தான் வெங்கட் பிரபுவும் அவரது தம்பி பிரேம்ஜியும்.

saveshakthi-turns-as-shamesakthi1
இவர்கள் பார்ட்டி பண்ணுகிற பண்ணைவீடுகளில் எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன என்பது வரலட்சுமிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

குடித்துவிட்டால் போத்தீஸ் துணிக்கடை பொம்மையைக் கூட விட்டு வைக்க மாட்டார் என்று பிரேம்ஜி  பற்றி திரையுலகில் பேசாதவர்களே இல்லை.

இப்படிப்பட்டவர்களிடம் எல்லாம் கையெழுத்து வாங்கி , வரலட்சுமி சரத்குமார் பெண்களை காப்பாற்றப்போகிறேன் என்று சொல்வதைவிட இழிவான விஷயம் வேறில்லை.

– ஜெ.பிஸ்மி