சசிகுமார் நடிக்கும் காமெடி படம்

66

 

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் படங்கள் ‘நாடோடிகள்-2’ படம் இனி வெளிவர வாய்ப்பில்லை என்று படத்துறையில் செய்தி பரவியுள்ளது. இந்த தகவலை சமுத்திரக்கனியே அறிவித்துள்ளார்.

இந்தப்படம் தவிர ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார்.

இந்த படங்கள் தவிர ‘ராஜவம்சம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.

சசிக்குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கும் இந்த படத்தில் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ், ரமேஷ் கண்ணா, யோகி பாபு, சிங்கம் புலி, மனோபாலா உட்பட சுமார் 50 பேர் நடிக்கிறார்கள்.

சுந்தர்.சி படத்தைப் போல் முழுக்க முழுக்க காமெடிப்படமாக உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்!

தன்னுடைய குருநாதர் பாணியிலேயே இந்த படத்தை இயக்கியுள்ளார் கதிர்வேலு.

காமெடிப்படமாக இருந்தாலும் தற்போது நாட்டுக்கு மிகவும் தேவையான நல்லதொரு கருத்தை கூறும் படமாக இந்தப்படத்தை இயக்கியுள்ளாராம்.

‘செந்தூர் ஃபிலிம்ஸ்’ சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளன.