சர்கார் ரிலீஸ் தேதி குழப்பம் தீர்ந்தது Comments Off on சர்கார் ரிலீஸ் தேதி குழப்பம் தீர்ந்தது

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தீபாவளிக்கு வெளிவருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 6ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை வருவதால் சில தினங்களுக்கு முன்னதாக நவம்பர் 2ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று கடந்த சில தினங்களாக படத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சர்கார் படம் நவம்பர் 2ஆம் தேதி வெளிவரவில்லை தீபாவளி அன்று வெளிவருகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று சர்கார் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது சர்கார் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு தகவல்களையும் சமூகவலைத்தளங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது சர்கார் படம் 6 தேதி அதாவது தீபாவளி அன்று வெளிவருவதால் அதற்கு சில தினங்களுக்கு முன்னதாக நவம்பர் 2ஆம் தேதி அன்று பில்லா பாண்டி படம் திரைக்கு வருகிறது.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
‘துப்பாக்கி முனை’ படத்திற்கு யு சான்றிதழ்

Close