சங்கத்தமிழன் படத்தில் அனிரூத் !

46

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜய் நடித்த பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் விஜயா புரொடக்‌ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள சங்கத்தமிழன் படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் இருவரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன், ஸ்ரீ ரஞ்ஜனி, மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து சங்கத்தமிழன் படத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு .கார்த்திக் வரிகளில் வெளியான ‘கமலா’ என்ற பாடல் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது.

பிரான்சிஸ் எழுதிய “சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான்” என்ற பாடலை அனிரூத் பாடியுள்ளார்.

இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது.