வித்தியாசமான கதையமைப்பில் உருவாகிவரும் ‘சைவ கோமாளி’

524

எஸ்.எம்.எஸ்.மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய்மகேந்திரன் இணைந்து தயாரித்து வரும் புதிய படம் ‘சைவ கோமாளி’.

கில்லி, குருவி, தூள் படங்களை இயக்கிய டைரக்டர் தரணி, ‘புதிய கீதம்’ படத்தை இயக்கிய டைரக்டர் ஜெகன், ‘வேட்டைக்காரன்’ படத்தை இயக்கிய டைரக்டர் பாபுசிவன், ‘மௌனகுரு’ படத்தை இயக்கிய டைரக்டர் சாந்தகுமார், ஆகியோரிடம் உதவியளாராக பணியாற்றிய சுரேஷ் சீதாராம் முதன்முறையாக இந்தப்படத்தை இயக்கி தமிழ்த்திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு சைகோவும் இருக்கான் ஒரு கோமாளியும் இருக்கான், அவன் எப்படி தன்னை வெளிப்படுத்துவான் என்பது இந்தச் சமூகம் அவனை எதிர்கொள்கின்ற முறையில்தான் இருக்கிறது என்ற கருத்தையும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளையும், அதை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வையும் இந்தப் படத்திற்கான திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள்.

108 ஆம்புலன்ஸின் முக்கியத்துவத்தைப்பற்றி விளக்கும் ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு இறங்கு’ என்றபாடல் காட்சியை ஈ.சி.ஆர். ரோடு, பல்லாவரம், பம்மல், கீழுர், மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் குத்துப்பட்டாக படமாக்கியிருக்கிறார்கள்.

இந்தக் குத்துப்பாட்டில் 108 ஆம்புலன்ஸின் கம்பவுண்டராக நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், டிரைவராக நடித்திருக்கும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ராஜ்குமார், முதலுதவி மருத்துவராக நடித்திருக்கும் நடிகை ரெஹானா ஆகியோர் ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள். இந்தப்பாடலைகானா பாலா எழுதி பாடியிருக்கிறார்.

இதில் அஸிஸ்டென்ட் போலிஸ் கமிஷ்னராக பவர் ஸ்டார் சீனிவாசன், ஆடம்பர வாழ்க்கை வாழும் கிரிமினல் மினிஸ்டராக ஜி.எம்.குமார், கலகலப்பூட்டும் காமெடி வேடத்தில் டி.பி.கஜேந்திரன், படம் பார்ப்பவர்களை மிரட்டும் சைக்கோ வேடத்தில் புதுமுக நடிகர் ரஞ்சித், ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மற்றும் சூப்பர்குட் லட்சுமணன், கிரேன் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, டி.கே.கலா, காயத்ரி, வனிதா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கே.பாலா, இசை – கணேஷ்ராகவேந்திரா, எடிட்டிங் – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், கலை- கார்த்திக், ராஜ்குமார், நடனம்  – தம்பிசிவா, சண்டைப்பயிற்சி- டி. ஷங்கர்

தயாரிப்பு – ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய்மகேந்திரன்,

எழுத்து, இயக்கம்  – சுரேஷ் சீதாராம்.