சீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு

2029

2015ல் சென்னை நகரை மூழ்கடித்த வெள்ளம், சென்னையில் குவிந்துகிடந்த குப்பைக்கூழங்களை எல்லாம் அடித்துச்சென்றுவிட்டது.

அதேநேரம், ஆர்.ஜே.பாலாஜி போன்ற சில குப்பைகளை விட்டுச்சென்றும்விட்டது.

சென்னையில் வெள்ளம் வந்தபோது, எத்தனையோ பேர் தன்னார்வத்துடன் களத்தில் இறங்கிபாடுபட்டனர்.

அவர்களின் பெயர்கள் கூட மற்றவர்களுக்கு தெரியாது.

ஆனால் ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்கள் கையில் ஊடகத்தை வைத்துக் கொண்டு தங்களுக்கு செமத்தியாய் பப்ளிசிட்டி தேடிக்கொண்டனர்.

அதை வைத்தே ஆர்.ஜே.பாலாஜி சமூக சேவகராக உருவெடுத்தார்.

அவருடைய சாயம் காவிரி பிரச்சனையில் வெளுத்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த வாரம் சென்னையில் ஐபிஎல் போட்டிகள்  நடைபெறவிருந்தது.

இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதற்காக, ஐபிஎல்லை இடம் மாற்றக்கோரி தமிழ் உணர்வு கொண்ட அத்தனை பேரும் குரல் கொடுத்தனர்; கடுமையான போராட்டங்களும் நடைபெற்றன.

அதனால் அடுத்தடுத்து சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஏப்ரல் 20 முதல் புதுப்படங்கள் ரிலீஸாக உள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட்டை இடம் மாற்றியது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளிவைக்கப்படுமா? என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

அவருடைய தம்பி அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், உதயநிதியின் மனைவி இயக்கிய காளி படங்கள் ரிலீஸாக உள்ள சூழலில் ஏன் இப்படி ஒரு கேள்வியை அவர் எழுப்பினார் என்பது ஒரு பக்கம் இருக்க, ஆர்.ஜே. பாலாஜியும் இதே கேள்வியை தற்போது எழுப்பியுள்ளார்.

“ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா?

தவறை ஏற்றுக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்”

என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

அதாவது ஐபில்லுக்கு எதிராகப்போராடிய சீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் போன்றோர் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

ஆர்.ஜே.பாலாஜி ஒரு அரைவேக்காடு என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இது.