தலைசிறந்த திரைப்படைப்பாளி இயக்குனர் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்பட மற்றும் கலாச்சார நிறுவனம் (ஐஐஎஃப்சி) மறைந்த மூத்த திரைப்படைப்பாளி இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பாரம்பரியம் குறித்த நான்கு நாள் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது.
பிப்ரவரி 13 முதல் 16,2025 வரை வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து நடத்திய நிகழ்வில், பாலு மகேந்திராவின் மதிப்புமிக்க படங்களின் தொகுக்கப்பட்ட காட்சிப்படுத்தல், இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகள் குறித்த ஆழமான விவாதங்கள் மற்றும் கடந்தகால கண்ணோட்டங்கள் ஆகியவை இடம்பெற்றன.
நிறைவு விழாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, டாக்டர் ஐசரி கே கணேஷ், நடிகர்கள் ரோகிணி மோலேட்டி மற்றும் நிழல்கள் ரவி, தந்தை ராஜநாயகம் மற்றும் அகிலா பாலு மகேந்திரா உள்ளிட்ட தலைசிறந்த சினிமா ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
அவர்களின் வருகை திரைத்துறையில் பாலு மகேந்திரா செய்த பணியின் ஆழமான தாக்கத்தையும், அதன் தற்போதைய கலாச்சார பொருத்தத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஐஐஎஃப்சி மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்த முன்முயற்சி தொலைநோக்கு பார்வை கொண்ட திரைப்டைப்பாளியின் கலைத்திறனை கௌரவித்ததுடன் எதிர்கால தலைமுறை திரைப்படைப்பாளிகளையும் திரைப்பட ஆர்வலர்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.