சந்தானம் இல்லாமல் சரிப்பட்டு வராது…! உதயநிதி எடுத்த உஷார் நடவடிக்கை…!

782

சினிமாவில் நுழைவதற்கு வேண்டுமானால் பெரிய இடத்துப் பிள்ளை… பேரன் போன்ற பின்புலங்கள் உதவுமே தவிர, ஜெயிப்பதற்கு அதெல்லாம் வேலைக்கே ஆகாது.

இதை தெளிவாகப் புரிந்து கொண்டு சினிமாவுக்கு வந்தவர் உதயநிதி.

கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற பெத்தபேரோடும், ஏகப்பட்ட கோடிகளோடும் தயாரிப்பாளராக உள்ளே வந்தார் உதயநிதி.

விஜய், சூர்யா, நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்களை கரன்ஸியால் அடித்தே கால்ஷீட் வாங்கினார்.

அதன் காரணமாக வெகு சீக்கிரமே முன்னணி தயாரிப்பாளராக உயர்ந்தார்.

தானே கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட உதயநிதிக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கைகொடுத்தவர் சந்தானம்.

ஏறக்குறைய இன்னொரு ஹீரோவாகவே படம் முழுக்க பவனி வந்தார் சந்தானம்.

அதனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா என இரண்டு படங்களில் நடித்தார் உதயநிதி.
இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிசில் தேறவில்லை.

உதயநிதி நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள கெத்து படத்தின் வசூல் இன்னும் மோசம்.

பொங்கல் வெளியீடுகளில் கடைசி இடத்தில் இருக்கிறது- கெத்து படம்.

ஆக.. சந்தானம் இல்லாமல் ஸோலோ ஹீரோவாக சர்வைவல் பண்ண முடியாது என்பதை உதயநிதிக்கு கெத்து படத்தின் ரிசல்ட் புரிய வைத்துவிட்டது.
அதே நேரம், மீண்டும் உதயநிதியால் சந்தானத்திடம் போகவும் முடியாது.

காரணம்.. இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட சந்தானம், பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தவிர நண்பேன்டா படத்தில் நடித்தபோது நயன்தாராவினால் உதயநிதிக்கும் சந்தானத்துக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.

எனவே உஷார் நடவடிக்கையில் இறங்கிவிட்டார் உதயநிதி.

சந்தானம் இல்லாமல், ஸோலோ ஹீரோவாக நடிப்பது வேலைக்கு ஆகாது என்பதால், இன்னொரு ஹீரோ உடன் கூட்டணி அமைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதே சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அதன்படி சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் உதயநிதி.