ரசிகர்களை கவர்ந்த ‘ரங்கா’ படத்தின் டீஸர்

25

சமீபத்தில் வெளியான 60 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய நடிகர் சிபிராஜின் ‘ரங்கா’ படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

“இதனை நாங்கள் ஒரு மிகச் சிறப்பான தொடக்கமாக கருதுகிறோம். டீஸர் பார்த்துவிட்டு சினிமா நண்பர்கள் தந்த பாராட்டு இன்னும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது.

அனைத்து பாராட்டும் இயக்குநர் டிஎல் வினோத் அவர்களுக்குரியது. இப்படத்தில் அவரது உழைப்பானது, திரைக்கதையிலிருந்து படத்தை உருவாக்கியது வரையிலும், மிகச் சிறப்பானது மேலும் இப்போது டீஸரை அவர் அளித்த விதம் அபாரமானது.

ராம்ஜீவனின் பின்னணி இசையும் அர்வியின் அபாராமான காட்சியமைப்பும் மிகச் சிறப்பாக அழுத்தமாக கதையையும், கதாப்பாதிரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது.

இத்தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ” என்கிறார் “பாஸ் மூவிஸ்” தயாரிப்பாளர் விஜய் கே செல்லைய்யா.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் டிஎல் வினோத்.

நாயகனாக சிபிராஜும் நாயகியாக நிகிலா விமலும் நடித்துள்ளார்கள்.

சதீஷ் , மோஹ்னீஸ் ரஹீஹா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.