ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்

89

‘குயின்’ சீரியலின் கதை நாமறிந்த ஜெயலலிதாவின் ஆளுமை மற்றும் அவருடைய  குணாதிசயங்கள் மற்றும் இரும்பு கரம் கொண்டு ஆட்சி செய்த  திறமை ஆகியவற்றை  வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி கதாப்பாத்திரத்தில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரம்யா கிருஷ்ணன் இதில் பிரபல அரசியல் வாதியாக நடித்திருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் இந்த சீரியலை எழுதியிருக்கிறார் ரேஷ்மா கட்டாலா.

இதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியுள்ளனர்.

MX Player-ல் பார்க்கக்கூடிய இந்த முன்னணி தமிழ் வெப் சீரியல், பிராந்திய மொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி,  மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.

இந்த குயின் வெப் சீரியல் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான MX Player-ல் கட்டணமில்லாமல் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.