ராஜூமுருகன் இயக்கும் ‘ஜிப்ஸி’… – வாழ்விடமற்ற நாடோடி மக்களின் கதையா?

771

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை அடுத்து ராஜு முருகன் இயக்கும் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘ஜோக்கர்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளில் பிசியாக இயங்கி வந்த ராஜுமுருகன், பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

இந்நிலையில் அடுத்து அவர் இயக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது.
‘ஜோக்கர்’ படம் மாதிரி சமூகப்பிரச்சனைகளைப் பேசுகிற படமாம் இது.

ஜிப்ஸி  படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.

தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார்  ஜிப்ஸி  படத்தை  தயாரிக்கிறார்.

ஜிப்ஸி என்பது நாடோடிகளைக் குறிக்கும் வார்த்தை. எளிய மனிதர்களை கதைநாயகர்களாக்குவதை வழக்கமாக் கொண்டிருக்கும் ராஜூமுருகன் ஜிப்ஸி படத்தில் வாழ்விடமற்ற நாடோடி மக்களைப் பற்றி பேசப்போகிறாரா?

பொறுத்திருந்து பார்ப்போம்.