24 வருடங்களுக்கு பிறகு ரஜினி உடன் இணைந்த நடிகர்

58

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ‘யோகி’ பாபு முக்கிய காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான தலீப் தாஹிலும் நடிக்கிறார்.

இது குறித்து படக்குழு சார்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும், தலீப் தாஹில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தர்பார் படத்தில் தான் நடிப்பதை உறுதிபடுதியுள்ளார்.

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார் தலீப் தாஹில்.

ரஜினிகாந்துடன் ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற ஹிந்தி படத்தில் இவர் ஏற்கெனவே நடித்திருந்தார்.

இந்த படம் 1995-ல் வெளியானது. ‘தர்பார்’ படத்தில் நடிப்பதன் மூலம் 24 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் ரஜினி உடன் இணைந்துள்ளார் தலீப் தாஹில்.

தர்பார் படத்தில் தலீப் தாஹில் நடித்தாலும், தமிழுக்கு இவர் புதியவர் அல்ல, ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தில் இவர் நடித்துள்ளார்.

தர்பார் படத்தில் தலீப் தாஹிலுக்கு வில்லன் வேடம் என்று தகவல் அடிபடுகிறது. படத்தின் பிரதான வில்லனே இவர்தானா என்பது போகப்போகத்தான் தெரியும்.