லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தின் மாபெரும் வசூல் சாதனையைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்திற்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.