• முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
Tamilscreen
Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result

centered image

  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result
Tamilscreen
No Result
View All Result

ராதிகாவுக்கு செக் வைத்த ஃபெப்ஸி! – ராடண் டி.வி.யின் தொடர்கள் இனி ஒளிபரப்பாகுமா?

by jbismi
Aug 15, 2013
in Hot News
0
ராதிகாவுக்கு செக் வைத்த ஃபெப்ஸி!  – ராடண் டி.வி.யின் தொடர்கள் இனி ஒளிபரப்பாகுமா?

தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து, சங்கத்தை உடைக்க முயற்சிக்கும் நடிகை ராதிகா தலைமையிலான சின்னத் திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை முதல் எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை என இயக்குநர் அமீர் தலைமையிலான திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பானக ஃபெப்சி அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் ராதிகாவின் அராஜகமான போக்கையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து இன்று சென்னையில் ஃபெப்சி தலைவர் இயக்குநர் அமீர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில்….

சின்னத்திரை தயாரிப்பளர்களிடம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தம் போடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒப்பந்த காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இருப்பினும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற காரணத்தினால சென்ற ஆண்டு தற்காலிக ஒப்பந்தம் போட்டு வேலை செய்துக்கொண்டு இருந்தோம். அதுவும் சென்ற மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு பலமுறை சின்னத்திரை நிர்வாகிகளை அழைத்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. தொழிலாளர் நல ஆணையரிடம் புகார் கொடுத்தும், அங்கும் ராதிகா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் தொழிலாளர் நல ஆணையர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கும்படி ஆலோசனை கூறினார். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தன்னிடம் புகார் கொடுக்கும்படி கூறினார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்த கடிதம் அனுப்பியும் அதை மதிக்காமல் ஃபெப்ஸியை உடைத்து, புதிதாக ஒரு தொழிற் சங்கத்தை ஆரம்பிப்போம் என்று கூறி, சின்னத்திரையின் தலைவி ராதிகா அவர்கள் தனது ராடான் அலுவலகத்தில் புதிதாக விண்ணப்ப படிவம் கொடுத்து வருகிறார். இதைக் கண்டித்து ராதாரவி, சரத்குமார் அவர்களிடன் பல முறை முறையிட்டோம். அவர்களும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சின்னத்திரை சார்பாக எந்தவித பதிலும் அளிக்காததால் ராதிகா குழுவைச் சார்ந்த சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 16) முதல் எந்தவித தொழி ஒத்துழைப்பும் தருவதில்லை என பெப்ஸி முடிவு செய்துள்ளது.
– இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ராதாரவி ராதிகாவின் அண்ணன், சரத்குமார் ராதிகாவின் கணவர். இவங்ககிட்டபோய் ராதிகா பற்றி முறையிட்டால் நியாயம் கிடைத்திடுமா? அமீர் அப்பேற்பட்ட அப்பாவியா?

Next Post

தலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை ?

jbismi

Related Posts

ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020
Hot News

ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020

Nov 22, 2019
மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’
Hot News

மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’

Nov 11, 2019
வித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’
Hot News

வித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’

Nov 11, 2019
சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்
Hot News

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்

Aug 12, 2019
நூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குனரை மிரட்டும் பீட்டா..!
Hot News

நூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குனரை மிரட்டும் பீட்டா..!

Aug 5, 2019
நாக்குல கூட தமிழ் சரியா வரலியே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க – சீமான்
Hot News

நாக்குல கூட தமிழ் சரியா வரலியே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க – சீமான்

Jul 30, 2019
Next Post
தலைவா பட விவகாரத்தில்  விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை ?

தலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2019 Tamilscreen.Com

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English

© 2019 Tamilscreen.Com