ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) திரைப்படத்தின் ‘சீரா சீரா’ பாடல்

41

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) திரைப்படத்தின் ‘சீரா சீரா’ பாடலை வெளியிட்ட AMAZON PRIME VIDEO

கிருஷ்ஷின் இசையில், மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் கிருஷ் பாடியுள்ள RARA திரைப்படத்தின் முதல் பாடலான சீரா சீரா பாடலை மனதைத் தொடும் வரிகளுடன் யுகபாரதி எழுதியுள்ளார்.

சமூக நடப்புகளை நையாண்டி செய்யும் விதமான எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video-இல் செப்டம்பர்-24 அன்று பிரத்தியேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும் சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 999 Amazon Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்கு சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ள Amazon-இன் தரமான உள்ளடக்கத்தைக் கண்டு ரசிக முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

மும்பை, செப்டம்பர்-17, 2021 – ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கிராமப் பின்னணியுடன் கூடிய, மனதைத் தொடும் வரிகளைக் கொண்ட சீரா சீரா பாடல் Amazon Prime Video-இல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் செப்டம்பர்-24 2021 அன்று வெளியிடப்பவுள்ளது.

மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் க்ருஷ் ஆகியோர் பாடியுள்ள இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். சீரா சீரா கிராமப்புற சூழலில் உங்களைப் பயணிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல் ஆகும். வாழ்க்கையின் எளிய சிறுசிறு சந்தோஷங்களை இப்பாடல் அழகாகப் படம் பிடித்துள்ளது.
பசுமையான வயல்வெளிகள், வளையல் உழும் காளைகள், கிராமத்து மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் விதம் ஆகியவற்றைக் காண்பது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.