ராஜ பார்வை – இதுவரை சொல்லப்பாடாத ஒரு காதல் காவியம்

176

வரும் திங்கள் முதல் பிற்பகல் 1 மணிக்கு ராஜ பார்வை புத்தம் புதிய மெகா தொடர் ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பாகிறது.

இது பார்வையற்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நேரும் ஒரு காதல் காவியம்.

ஸ்டார் விஜய் என்றும் தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்குகிறது. அது சீரியலாக இருந்தாலும் கேம் ஷோ அல்லது ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் நேயர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாகவேய வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேயர்கள் விரும்பும் பல அபிமான தொடைகளை வழங்கும் ஸ்டார் விஜய் வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ராஜ பார்வை தொடரை வழங்குகிறது.

ராஜ பார்வை – இதன் கதை வெவ்வேறு குடும்பத்தை சார்ந்த ரெண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளை பற்றியது. ஆனந்த் அழகான புத்திகூர்மையான இளைஞன்.

பார்வையற்ற அவன் அன்பானவனவனும்கூட. அவனது சகோதரன் அரவிந்.

மேலும் சாரு ஒரு அழகான நற்குணங்கள் நிறைந்த ஒரு பெண். அவளது சகோதரி பவித்ரா. சாறு ஒரு ராசியில்லாத பெண் என்று அவளது இரண்டாம் தாயால் வஞ்சிக்கப்படுபவள்.

சாருவும் ஆனந்தும் சந்திக்க நேரிடுகிறது ஆனந்த் சாருவை எதேட்சைக்காக கோவிலில் சந்தித்து அவளது ஸ்பரிசத்தி அறிந்து அவளை அடையாளம் கண்டு மனதளவில் நேசிக்கிறான்.

சாருவிற்கு ஆனந்திற்கு கண் பார்வையற்றவன் என்பது தெரியாது. இவர்கள் வாழ்வில் நேரிடும் சம்பவங்கள் திருமணங்கள் எவ்வாறு அவர்களது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்பதுதான் ராஜ பார்வை தொடரின் கதை.
நட்சத்திரங்கள்:

சாருவாக ரஷ்மி (நாம் இருவர் நமக்கு இருவர் புகழ்), ஆனந்தாக முன்னாஃப், அரவிந்தாக விகாஷ், பவீத்ராவாக கீர்த்திகா, சீனிவாசன் சிவகவிதா, கிரிஷ் மற்றும் பலர்.

22 மார்ச் 2021, திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு STAR VIJAY இல் மட்டுமே இந்த மிகவும் கவர்ச்சிகரமான காதல் நாடகத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.