‘வாட்ஸ் அப்’ வசுந்தரா நடிக்கும் – ‘புத்தன் இயேசு காந்தி’…!

698

சகமனிதனின் அன்பையும் உரிமையையும் பாராட்டும் ஒரு கதைதான் ‘புத்தன் இயேசு காந்தி’ படம்.

இப்படத்தை இயக்கியுள்ளவர் வே. வெற்றிவேல் சந்திரசேகர்.

இப்படத்தை பிளஸ்ஸிங் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் பிரபாதிஷ் சாமுவேல் தயாரிக்கிறார்.

முக்கிய கதை மாந்தர்களாக அசோக், கிஷோர், ‘வாட்ஸ் அப்’ வசுந்தரா நடிக்கிறார்கள்.

​ மதுமிதா, ‘கல்லூரி’ அகில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அசோக், வசுந்தரா இருவரும் பத்திரிகையாளர்கள்.

அசோக் ஜாலி பேர் வழி. சமூகத்தை வெகுஜனரசனை, கேளிக்கை என்று இலகுவான வழியில் அணுகுபவர்.

வசுந்தராவோ சமூகக் கோபமும், பொறுப்பும், போராடும் குணமும் கொண்டவர். அநீதிகண்டு பொங்குபவர்.​ ​

கருத்து கொள்கை முரண்பாடுள்ள இருவருக்குள்ளும் ஈர்ப்பு வருகிறது.

இந்த இருவரும் ஒரு பேட்டிக்காக ஒரு நபரைச் சந்திக்கிறார்கள். அவர் ஒரு சிறைத்தண்டனைக் கைதி.

இப்படி செய்தி சேகரிக்கச் சென்றவளே செய்தி ஆகிறாள். அது சமூகத்தில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையின் போக்கு.

இது முழுக்க சென்னையில் நடக்கும் கதை. படத்துக்காக பத்திரிகை அலுவலகம், ஜெயில் என 2 செட்கள் போடப் பட்டுள்ளன.

சிறையில் இருக்கும் தண்டனைக் கைதியாக கிஷோர் நடிக்கிறார்.

அவர் இந்த பாத்திரத்துக்கு நிறைய குறிப்புகள் ஆவணங்களைப் பார்த்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டு நடித்து வருகிறாராம்.

படத்துக்காக சென்னையில் போராட்டங்கள் நடை பெறும் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் போன்ற இடங்களில் பல மாதங்கள் ​​ரகசியமாகப் படப்பதிவு செய்து சேர்த்துள்ளனர்.

இது மூன்றே நாட்களில் நடக்கும் கதை. படத்தின் பெரும்பகுதி இரவில் நிகழ்கிறது​.​

சென்னையின் இரவு நேர இன்னொரு முகத்தை வியப்பூட்டும்படி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

இசை வேத்சங்கர். ​இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை​​ காணோம்’ ‘மதுபான​​க்கடை’ ,’மூன்றாம் உலகப்போர்’ படங்களின் இசையமைப்பாளர். பாடல்கள் கவிபாஸ்கர்

படத்தொகுப்பு ரமேஷ்பாரதி.

கலை -மூர்த்தி, நடனம் -எஸ். சுரேஷ், சண்டை – மிண்ட் கணேஷ்.

‘புத்தன் இயேசு காந்தி’ வேகமாக வளர்ந்து வருகிறது.​