தடைபட்டிருந்த சைக்கோ மீண்டும் தொடங்கியது

88

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘சைக்கோ’. இந்த படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குநர் ராம் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து வருகிறார்.

ஏவிஎம் சரவணனின் மகன் குகனின் மருமகனாக மைத்ரேயா, சைக்கோ படத்தில் தன்னை ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் 1 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று மிஷ்கின் மீது குற்றம்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

அதன் காரணமாக சில மாதங்களாக சைக்கோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமலே முடங்கிக் கிடந்தது.

இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்தார்.

இந்நிலையில் தடைபட்டிருந்த சைக்கோ பட பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

இளையராஜா இசையில் இந்த படத்திற்கான இறுதிப்பாடல் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை இளையராஜா இசையில் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், இளையராஜாவும், மிஷ்கினும் இணைந்து இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்’’ என்று பாராட்டியுள்ளார்.

விறுவிறுப்பாக இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது.