அந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….

48

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்த அந்தா துன் திரைப்படம், அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது.

இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்றது.

ஏற்கெனவே, ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ரீமேக் செய்தார் தியாகராஜன்.

தற்போது அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்.

இப்படத்தைப்பற்றி தியாகராஜன்…

‘’அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் பியானோ பயிற்சி பெற்றுள்ளார். நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் அவர். எனவே இந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கும்’ என்றார்.

தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இந்தப்படத்திற்கு, இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை.

இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதற்குள் இப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

ஸ்பெஷல் 26 ஹிந்திப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருந்தார் தியாகராஜன். அந்தக்கதையை திருடி இயக்குநர் விக்னேஷ்சிவன் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை எடுத்துவிட்டார்.

மீண்டும் அப்படியொரு திருட்டு நடந்துவிடக்கூடாது என்ற முன் எச்சரிகை காரணமாகவே அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார் தியாகராஜன்.