டிராபிக் ராமசாமி படத்தில் பிரகாஷ் ராஜ் Comments Off on டிராபிக் ராமசாமி படத்தில் பிரகாஷ் ராஜ்

க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் ‘டிராபிக் ராமசாமி’.

இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்படும் படமாகும்.

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் .

இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள்.

இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக இருக்கும்.

ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

இதைப் பற்றிப் பிரகாஷ்ராஜ் என்ன சொல்கிறார்…

“வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

“அவர் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் ” என்று இயக்குநர் விஜய் விக்ரம் கூறுகிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை குகன்.

எஸ்.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும், எடிட்டிங் பிரபாகரும், கலையை வனராஜ் அவர்களும் கவனிக்கிறார்கள்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
அருவி படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் ரஜினிகாந்த் !

Close