அழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன்

9

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’.

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தில் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார் .

நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன் நடிக்கிறார் .

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – ஆர்.விஜயகுமார்

தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)

பாடல்கள் – வைரமுத்து

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

ஒளிப்பதிவு – ஏ.ஆர்.அசோக் குமார்