எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஷோபா சந்திரசேகரனும் காதலர்களாம்… – போக்கிரி ராஜா விழாவில் நடந்தேறிய கேலிக்கூத்து….

693

கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “போக்கிரி ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் ஜீவா, சிபிராஜ் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் “போக்கிரி ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் பிரம்மாண்டாமாக நடைபெற்றது.

இதில் சினிமா பிரபலங்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பாபி சிம்ஹா, நந்திதா, விமல், சத்யராஜ், ரோபோ சங்கர், முனிஷ்காந்த் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

போக்கிரி ராஜா படத்தில் இடம்பெற்றுள்ள “அத்துவுட்டா” பாடலை இமான் மேடையில் பாடும்போது, விழாவுக்கு வந்திருந்த நட்சத்திரங்களை மேடைக்கு அழைத்து ஆட வைத்தார்.
“அத்துவுட்டா” பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும் இந்த பாடலுக்கு எழுந்து நின்று ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.

சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள் எல்லை மீறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாம்.

போலீஸ் வந்து அவர்களை அமைதியாக்குவதற்குள் சலசலப்பு நடந்தேறிவிட்டது.

காதலர் தினத்துன்று நிகழ்ச்சி நடைபெற்றதால் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இருவரும் மோதிரம் மற்றும் மாலைகளை மாற்றி காதலர் தினத்தை மேடையிலேயே கொண்டாடியுள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் காதலர்களா?  இவங்க கண்ணுக்கு வேற காதலர்களே கிடைக்கலையா?