“மெட்ராஸ்” கலையரசன் நடிக்கும் ‘பட்டினப்பாக்கம்’

Anaswara Kumar

முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’.

மெட்ராஸ் புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், ஈகோ மற்றும் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படத்தில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் இவர்களுடன் யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, மதுமிதா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இப்படத்தை இயக்குகிறார்.

ராணா இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.