கருணாநிதி பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார்- மு.க.ஸ்டாலின்

Pariyerum Perumal_stalin

தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார்.

பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.

சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார்.

உடன் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தை கண்டு களித்தனர்.

படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் அவர் என்ன சொன்னார்…?

“தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம் . திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.