த்ரிஷா நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’

780

த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இப்படத்தை திருஞானம் இயக்குகிறார்.

த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை பற்றி இயக்குனர் திருஞானம்…

இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும்.

த்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார். இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார்.

படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்றார் இயக்குனர் திருஞானம்.

படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் இப்படத்தின் கதையை கேட்டு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதற்காக மற்ற படங்களின் தேதியை மாற்றிவிட்டு வந்துள்ளார்.

இப்படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும்.