‘பண்ணாடி’ படத்தில் எஸ்.ஜானகி பாடிய பாடல் Comments Off on ‘பண்ணாடி’ படத்தில் எஸ்.ஜானகி பாடிய பாடல்

ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன் தயாரிப்பில் “பண்ணாடி” என்கிற படம் உருவாகிறது.

‘பண்ணாடி’ படத்தின் இரண்டு பாடல்கள் எஸ்.ஜானகி அம்மா பாடியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் க.ரமேஸ்பிரியாகணேசன் என்ன சொல்கிறார்…

அந்தப் பாடல் இப்போது லிரிகல் வீடியோவாக வெளியாகி ஹிட்களை அள்ளி வருகிறது.

அப்பாடல் ‘ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன். ஒன் முகத்த முகத்த வியந்து பார்க்குறேன்.

என் உசுர உனக்கு எழுதிக் கொடுக்குறேன்’ என்று நாயகன் பாட நாயகியோ’ நீ பேசும் பேச்சுல புதுசா நான் பொறக்குறேன், என் மனசு முழுக்க ஒன்னை நெனக்கிறேன், அந்த நெனப்பில் ஒறஞ்சி உறங்க மறுக்கிறேன்” என்று பாடுகிறாள். இதில் ஆண் குரலுக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் பாட பெண்குரலுக்கு எஸ்.ஜானகி பாடியுள்ளார்.

இப்பாடலை இயக்குநர் டி.ஆர்.பழனிவேலன் எழுதியுள்ளார்.

“இந்தப்படம் முழுக்க முழுக்க கிராமப்புற மக்கள் அவர்களது வாழ்வியலை அடிப்படைவாகக் கொண்டது . நேர்மை, உண்மை, பாசம், காதல், பண்பு கலாச்சாரம், விவசாயம், இவை அனைத்தும் ‘பண்ணாடி’ குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்வியல்தான் கதை.

இப்போதைய சூழலில் அக்குடும்பத்தில் வந்த கதாநாயகன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

இந்த படத்தின் சிறப்பம்சமே எஸ்.ஜானகி அம்மா பாடல் தான் ஜானகி அம்மாவை சந்திக்க வாய்ப்பு சேகர் மூலமாக கிடைத்தது. இரண்டு பாடல்களும் மிக அற்புதமாக வந்துள்ளன.

‘பண்ணாடி’ படத்தில் ரிஷி ரித்விக், சுப்ரஜா, வேல ராமமூர்த்தி, ஆர்.வி.உதயகுமார். மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தை நானும் டைரக்டர் டி.ஆர்.பழநிவேலன் இருவரும் இணைந்து தயாரிக்கிறோம். படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிட உள்ளோம்.” என்கிறார்.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பு – ஜான் ஆப்ரகாம்

சண்டைப்பயிற்சி – KNIFE நரேன்

தயாரிப்பு – க. ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன்.

 

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
விஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்

Close