இசையமைப்பாளர் சிற்பி மகன் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளி பருவத்திலே’

768

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டி.வேலு தயாரிக்கும் படத்திற்கு பள்ளி பருவத்திலே என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள்.

மற்றும் தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு இருவரும் காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.

ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, இ.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வினோத்குமார்

இசை – விஜய் நாராயணன். இவர் இளையராஜா, A.R.ரகுமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.

பாடல்கள் – வைரமுத்து, வாசு கோகிலா, எம்.ஜி.சாரதா.

கலை – ஜான்பிரிட்டோ

எடிட்டிங் – சுரஷ்அர்ஷ்

நடனம் – தினா

ஸ்டன்ட் – சுப்ரீம்சுந்தர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வாசுதேவ் பாஸ்கர். இவர் அருண் விஜய் நடித்த வேதா என்ற படத்தை தயாரித்ததுடன், மறுபடியும் ஒரு காதல் என்ற படத்தை இயக்கியவர். பள்ளி பருவத்திலே படத்தை பற்றி வாசுதேவ் பாஸ்கர் என்ன சொல்கிறார்?

“நிஜ சம்பவங்களின் தொகுப்பே கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நான் படித்த பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானது. அந்த பள்ளியில் படித்த நிறைய பேர் இன்று டாக்டர்கள், வக்கீல், ஆடிட்டர், தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். அப்படி உருவாகக் காரணமான ஆசிரியர் சாரங்கன் அவர்களின் கதாப்பாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருக்கிறார்.

இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புறங்களை பற்றிய சிந்தனை மக்களிடத்தில் உருவாகி உள்ளது.

அழிந்து வரும் விவசாயத்தை காக்கும் பொருட்டு படப்பிடிப்பு நடைபெறும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 100 பசு மாடுகளை தானமாக கொடுக்க உள்ளோம்.

துவக்க விழா நடைபெற்ற பிப்ரவரி 12 ஆம் தேதி முதல், படிப்பிடிப்பு முடிவடைவதற்குள் 100 மாடுகளை வழங்க உள்ளோம்.

பள்ளி பருவத்திலே கிராமத்து பின்னணியில் காமெடி படமாக உருவாகிறது.”