பக்கிரியின் பரிதாப வசூல்நிலவரம்

190

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்த பிரெஞ்சு – ஆங்கிலப் படம் ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’.

ஹாலிவுட் இயக்குனர் கென்ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஜக் வார்ட்ரோபின், ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட காமெடி படமாகும். இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த ஆண்டு பிரான்சில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. அதனால் மற்றநாடுகளில் படத்தை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனாலும் இப்படத்தின் தமிழ் டப்பிங் ரைட்ஸை வாங்கி வைத்திருந்தார் தனுஷ்.

தமிழில் தன்னுடைய படம் வெளியாகி நீண்ட காலமாகிவிட்டதால் படம் ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தை ‘பக்கிரி’ என்ற பெயரில் டப் பண்ணினார்.

அவருடைய வுண்டர்பார் நிறுவனம் தற்போது படத்தயாரிப்பை கைவிட்டுவிட்டு ரஜினியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது. எனவே பக்கிரி படத்தை தன்னுடைய நிறுவனத்தின் மூலம் ரிலீஸ் பண்ணாமல், ‘ஒய்நாட் எக்ஸ் என்ற விநியோக நிறுவனம் மூலம்’ வெளியிடும்படி ஒரு ஏற்பாட்டை செய்தார்.

கடந்தவாரம் வெளியான பக்கிரி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகம் முழுக்க இப்படம் வசூலித்த தொகை ஒரு கோடியைக் கூட தொடவில்லையாம்.

இந்தப்படத்தை வெளியிட்ட , ‘ஒய்நாட் சஷிகாந்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் தனுஷ்.