கிச்சா சுதீப் பெயரை மாற்றியது ஏன்?

122

‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற கிச்சா சுதீப் அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடித்த கோடிகோபா2 என் கன்னடப்படம் முடிஞ்சா இவனப்புடி என்ற பெயரில் தமிழில் வெளியானது. ஆனால் படம் படு தோல்வியடைந்தது.

அதனால் தமிழ்ப்படங்களில் நடிக்கவே ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ‘பயில்வான்’ என்ற படம் உருவாகி வருகிறது.

‘ஆர்.ஆர்.ஆர்.மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார்.

குத்துச்சண்டையை மையமாக வைத்து எமோஷன், ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்த ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கிச்சா சுதீப்புடன் அகான்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் கிச்சா சுதீப் குத்துச்சண்டை வீரராக தோற்றமளிக்கும் போஸ்டர்களை அந்தந்த துறையிலுள்ள பிரபலங்கள் சமீபத்தில் வெளியிட்டனர்.

தமிழ் ‘பயில்வான்’ போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார். தெலுங்கு போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார்.

ஹிந்தி போஸ்டரை சுனில் ஷெட்டி வெளியிட, மலையாள போஸ்டரை மோகன்லால் வெளியிட்டார்.

இந்த படத்திற்காக தன்னுடைய பெயரை கிச்சா சுதீபா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் கிச்சா சுதீப்.

எதற்காக தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது பற்றி தகவல் இல்லை.