‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ இசை வெளியீட்டு விழாவில்…

960

‘தெரு நாய்கள்’ படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ஐ கிரியேஷன்ஸ் படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’.

‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மன்சூரலிகான்., ”கலைக்கு ஜாதி, மதம், மொழி கிடையாது…. தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றும் முயற்சிக்குக் கூட நான் எதிரானவன். எம்.ஜி.ஆர்., என்.டி .ஆர், வி.கே.ஆர். மண்வெட்டி பிடித்து எல்லாம் வளர்த்து எடுத்த சங்கம் அது. எனவே குறுகிய மனப்பாண்மை கூடாது …. என்பது என் கருத்து.

பொதுவா, நான் எந்த சினிமா விழாவுக்கு போனாலும் , அந்தப் படத்தை ஆஹா, ஒஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும் பாராட்டி பேச மாட்டேன்.

ஆனால், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மாதிரி. ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ எனும் இப்பட டைட்டிலே. இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.

இப்படித்தான், “ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட ராஜகு லோத்துங்க ……” என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப் பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்த போது, “தெற்கு தெருமச்சான் ” ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர்சத்யராஜும், இயக்குனர் மணிவண்ணனும் இது என்னய்யா டைட்டில்? போய்யா … என்றனர்.

ஆனால், அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம், ஒரு பங்ஷன்ல என்பேமிலியும், ரஜினி பேமிலியும் கலந்து கொண்டோம்….

அப்போ, என் பசங்களும், ரஜினி பசங்களும், உங்க படபேர வச்சு , அதை தப்பு இல்லாது சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க அப்பவே நினைச்சேன் நீ, ஜெயித்து விட்டாய் …. என்று என என்னைப் பாராட்டினார். அப்படி இந்தப் பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.

மோடி அரசு கொண்டு வந்த டீ மானிஸ்ட்ரேஷனுக்கு முன்பு ., தமிழ் சினிமா ,தென் இந்திய சினிமா நல்லா இருந்தது .டிமானிஸ்ட்ரேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர் காணாமல் போயிட்டாங்க … அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு … எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீஸர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு …. அது இருக்குன்னு ….சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம்.

ஆனா, திடீர்ன்னு எட்டு வழிச்சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம் . 8 வழி யார் கேட்டா ? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும் , அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் ? யாருக்கெல்லாம் பயன் …? அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல…? சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு …? சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய் ..? இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம் , எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால் ., 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணீய தனியாருக்கு விற்க பார்க்குது.

காத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும் .தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டம் என்கிறார்கள்.

நீ என்ன வெங்காயம் விற்க, மயிர் புடுங்க.. ஆட்சி நடத்துகிறாய்? ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள்? 5 பைசா பொது மக்களக்கு வந்ததா..? சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா? பெரிய பெரிய நடிகன் பின்னாடி போனா இப்படித்தான்.

மத்திய அரசின் “பணம் செல்லாமை” அறிவிப்புக்குபின் நைட்டோடு நைட்டாக ஓஹோ என ஓடிய படங்கள் எத்தனை தியேட்டர்களில் எத்தனை படங்கள் ஒடவில்லை? அதற்கு பணத்தை திருப்பி தந்தானா? பணக்காரன் யாராவது கஷ்டப்பட்டானா? பலகோடி புது நோட்டுகள் எப்படி? பல பணக்காரன் கையில் கிடைத்தது? இது என்ன நாடா ..?

திருவள்ளுவர் சொன்னது மாதிரி நம் நாட்டை நமக்கே வளமாக்கி எடுத்துக்கொள்ளத் தெரியாதா..? ஏன் இத்தனை எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர்? எல்லாம் கமிஷன் தான் காரணம் . கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி நாம் தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம் .

காந்தி , காமராஜர் எல்லாம் , அன்று பிரிட்டீஷ்காரனை ஓடவிட்டார்கள். இன்று ,இவர்கள் , கொரியா ,ஜப்பான் காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்தப் படம் , ” படித்தவுடன் கிழி க்கவும் ” , நாம் ,,இந்த மாதிரி திட்டங்களை கிழிக்கவும் . நாடு நாசம் ஆவதை தடுக்கவும் தயங்கக் கூடாது … என ஆவேசமாக பேசி அமர்ந்தார்.

இப்பட இயக்குனர் …

ஹீரோ ஹீரோயின் வேல்யூ இல்லாத புது டீமினரின் படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சிக்க வேண்டும் என்றதோடு ., மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான “தெரு நாய்கள்” படத்தில் சுட்டி காட்டினேன் அப்படம் பேசப் பட்ட .அளவிற்கு போகவில்லை.

இரண்டாவதாக, இந்த ., “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தில் ., ஹாரர்கதை என்றாலும் பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில் படித்த, படிக்காதவன் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன். எஸ்.டிஆர், யுவன் உள்ளிட்டோர் இப்படத்தின் சிங்கிள் டிராக், டீஸர் எல்லாம் வெளியிட்டு உதவியது மறக்க முடியாதது நன்றி . இப்படத்தின் வெற்றியை பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன் என்றார்.