பா.ரஞ்சித்துக்கு பணம் பற்றி கவலையில்லை

57

‘காலா’ படத்தை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை வரலாற்றை பா.ரஞ்சித் படமாக இயக்க இருக்கிறார் என்றும் இந்த படம் ஹிந்தி மொழியில் உருவாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுவரை பா.ரஞ்சித் பிர்சா முண்டா படத்தின் படப்பிடிப்பை தொடங்கவில்லை.

மாறாக, அவருடைய தயாரிப்பில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு பரியேறும்பெருமாள் படம் வெற்றிப் படமாக அமைந்ததால் அடுத்தடுத்து படம் தயாரிக்கும் முயற்சியிலேயே இருக்கிறார் பா.ரஞ்சித்/

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து சுரேஷ் மாரி என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார் பா.ரஞ்சித். இந்த படத்தில் கலையரசன் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பதற்கு தேவையான பைனான்ஸை கொடுக்க மும்பையை சேர்ந்த மிகப்பெரிய பைனான்சியர் முன் வந்துள்ளாராம். அவர்தான் பிர்சா முண்டா படத்துக்கு பைனான்சியர் என்றும் கேள்வி.