அஜித் மட்டும்தான் நடிகரா?… அனலைக் கிளப்பிய எழுத்தாளர்

999

சோழநாட்டில் பிரபலமாக விளையாடப்பட்டு வந்த கோலிக்குண்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் – ‘ஒன்பது குழி சம்பத்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கமலா திரையரங்கில்  நடைபெற்றது.

திரைப்பட இயக்குநர்கள் சுசீந்திரன், குழந்தைவேலப்பன், கமலக்கண்ணன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர்கள் ஜீவன், கோபி சுந்தர், இசை அமைப்பாளர் ஜூபின், தயாரிப்பாளர் செல்வக்குமார் மற்றும் ஒன்பது குழி சம்பத் திரைப்படத்தில் பணியாற்றிய  ஊழியர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஒப்பாரிப் பாடல் ஒன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பாடலை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் எழுதி இருக்கிறார்.

onpathu-kuzhii-sampath-audio-launch Stills 003

ஒன்பது குழி சம்பத் இசைவெளியீட்டு விழாவில் மற்றவர்கள் எல்லாம் சம்பிரதாயமாக பேச, கண்மணி குணசேகரன் பேச்சில் மட்டும் அனல் பறந்தது…

“அஜித் மட்டும்தான் நடிகரா? அஜித், நயன்தாரா, வைரமுத்து, ஏ.ஆர். ரகுமான் போட்டு படம் எடுத்து ஜெயிக்கிறது பெரிய வெற்றி இல்ல.

இலக்கியபூர்வமான கலைநயம் ததும்பும் ஒரு உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து ஜெயிப்பதுதான் வெற்றி.

அந்த வகையில இந்த படத்தோட தயாரிப்பாளர் செய்திருப்பது ஒரு திறமையான தயாரிப்பாளரோட வேலை. அதை நான் பாரட்டுகிறேன்.

ரஜினி, கமல் படங்களில் காச விடும் விநியோகஸ்தர்கள் இந்த படத்தையும் கொஞ்சம் பாருங்க.

இந்த மாதிரி நல்ல படத்தையும் வியாபாரம் பண்ணுங்க.

பெரிய ஹீரோ நடிச்ச படத்த வியாபாரம் பண்ணி விடுற காச விட இதுல பெருசா விட்டுட மாட்டீங்க. இவுங்கள ஆதரிச்சு கொஞ்சமாவது தொழிலுக்கும் மக்களுக்கும் நியாயம் பண்ணுங்க.” என்று மனதில் பட்டதை தைரியமாகப் பேசினார் கண்மணி குணசேகரன்.