‘நாலு போலீசும் நல்லா இருந்தா ஊரும்’ படத்தின் கதை என்ன?

1018

இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’.
JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளிவருகிறது.
தனது முதல் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?
“நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும்’ திரைப்படம் குற்றமே செய்யாத, நல்லொழுக்கம் வளர்ந்து நிற்கும் ‘பொற்பந்தல்’ என்ற கிராமத்தில் இருக்கும் நான்கு போலீஸ்காரர்கள் பற்றிய கதை. சிறு விஷயத்தையும் பூதாகரமாக எண்ணிக் கொள்ளும் போலீஸ்காரராக அருள்நிதி நடித்திருக்கிறார்.
நல்லதை மட்டுமே குழந்தைகளுக்கு போதிக்கும் டீச்சராக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
தென்காசி, குற்றாலத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்புக்காக அனைத்து கிராமங்களையும் முழுக்க சுத்தம் செய்து திருக்குறள், பொன்மொழிகள் என ஆங்காங்கே எழுதி வைத்தோம்.
இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் நாங்கள் ஷூட்டிங் முடிந்த பின்னரும் அந்த  கிராமத்து மக்கள் இதை பின்பற்றுகிறார்கள்.
நாங்கள் படப்பிடிப்புக்கு போகும் போது  கூட  எங்களுடைய கண்களுக்கு ஏற்ற கிராமமாக இருந்தால் போதும் என்று நினைத்துதான் போனோம், ஆனால் படம் பிடிக்கும் போதும் படப்பிடிப்பு முடிந்து வந்தப் பிறகும் அந்த கிராமம் எங்கள் கருத்துக்கும் உகந்த கிராமமாக இருந்தது என்பதே படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.
“படத்தின் கதாப்பாத்திரங்கள் படும் அவதிகள் படம் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும். ‘நாலு போலீசும் நல்லா இருந்தா ஊரும்’ ஒரு முழு நீள காமெடி கமர்ஷியல் திரைப்படம். திரையரங்கிற்கு வருவோர்க்கு மகிழ்வையும், மன நிறைவையும் தரும் எனக் கூறினார் புதுமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா.