‘நிமிர்ந்து நில்’ – விமர்சனம்

1204

உன்னை நீ சரி செய்து கொள், உலகம் தானாக சரியாகும் என்ற மெஸேஜ் சொல்லும் கமர்ஷியல் படம்.

முதல்வன், இந்தியன், அன்னியன் வரிசையில் ஷங்கர்தனமான கதையை கையில் எடுத்ததற்காகவே நிமிர்ந்து நிற்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.

இரண்டு வேடங்களில் ஜெயம் ரவி. அறிமுகக்காட்சியில் அமுல்பேபி ரவி. போகப்போக பெரும் புயலாகச் சுழன்று அடிக்கிறது இந்த இளம் புயல்.

சமூத்தையே செவிட்டில் அறைவது போன்ற கதையை யோசித்த இயக்குநர், லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவர்கள் சங்கம் வைத்து கூத்தடிப்பது, நீதிமன்றக்காட்சியில் ரெட்டி நல்லவனாக மாறுவது, இரண்டு வேடங்களில் ஒன்று சாக வேண்டும் என்ற எம்.ஜி.ஆர்.காலத்து ஃபார்முலாவில் க்ளைமாக்ஸ் போன்ற மேலாட்டமான காட்சிகளை தவிர்த்திருந்தால் தலைப்பைப் போலவே படமும் நிமிர்ந்து நின்றிருக்கும்.